‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

Date:

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் புதுப்பேட்டை முதல் எழும்பூர் வரை பேரணி நடைபெற்றது. பேரணி முடிவில் கண்டன பொதுக்கூட்டமும் இடம்பெற்றது, இதில் சமூக, அரசியல், மற்றும் திரைக்கலைஞர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டு காசா மக்கள் மீது நடக்கும் வன்முறையை கண்டித்தனர்.
விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹுருல்லா, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, நெல்லை முபாரக், கி.ராம்கிருட்டிணன், தனியரசு, கருணாஸ் உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் மற்றும் திரைக்கலைஞர்களில் நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது, பாலஸ்தீனத்தின் பக்கம் இந்தியா நிற்க வேண்டும் என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசும்போது, “இதுபோன்று கூட்டத்தில் கலந்து கொள்வது எங்களை போன்ற கலைஞர்களுக்கு கடமை. அப்படி இல்லை என்றால் நாங்கள் கலைஞர்களே இல்லை. இது இஸ்லாமியர்களுக்காக கூடிய கூட்டம் அல்ல. அனைத்து மக்களுக்கும் ஒன்றிணைந்து போராடி வருகிறோம். இனப்படுகொலயை தடுத்து நிறுத்த வேண்டும் அது தான் முக்கியம். எனவே காசாவில் நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும்.” என்றார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் பேசும்போது, “அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தான்கலைஞர்கள். ஒரு நாட்டிற்கு பாதிப்பு என்றால் எல்லோரும் குரல் கொடுக்போம். காசாவில் நடக்கும் போருக்கு அமைதியாக இருக்கும் ஒவ்வொரு மனிதனும் காரணம்” என்று கூறினார்.
இயக்குநர் அமீர் பேசும்போது, “மதம் அடிப்படையில் இல்லாமல், மனிதாபிமானம் அடிப்படையில் ஒன்று திரண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “இன்று காசா பஞ்சப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தில் ஒருவருக்கு பசி மரணம் ஏற்படும். ஊட்டச்சத்து இல்லாமல் குழந்தைகள் இறப்பார்கள் என ஐநா தெரிவித்துள்ளது.
எல்லா உதவி அந்த நாட்டின் வெளியே இருக்கிறது; அதை உள்ளே அனுப்ப மாட்டேங்கிறார்கள். இந்த திட்டமிடப்பட்ட இனப்படுகொலையை கண்டிப்பது நமது கடமை. மனிதர்களாக உள்ள அனைவரும் இதனை வலியுறுத்த வேண்டும் என்றும், மாற்றம் ஒரேநேரத்தில் நேரடியாக நடக்காது என்றாலும், எதிர்ப்பை பதிவு செய்வது நமது பொறுப்பாகும் ” என வலியுறுத்தினார்.

பேரணியில் பங்கேற்ற சமூக ஆர்வலர் ஜவாஹிருல்லா, “பெரியாரின் தடியே அமெரிக்காவின் ஆதிக்க அரசியலை சாய்க்கும். உலக மக்கள் காசா மக்களின் பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது” எனக் கடுமையாக உரையாற்றினார்.

போரின் கொடுமையை வெளிப்படுத்தும் வகையில், பங்கேற்பாளர்கள் பலர் காசா மக்களின் துயரத்தை விளக்கும் படங்களையும், பதாகைகளையும் தூக்கி வந்தனர். “காசா மக்களுக்கு சுதந்திரம் வேண்டும்”, “அமெரிக்கா-இஸ்ரேல் குரூரம் நிறுத்தப்பட வேண்டும்” என்ற கோஷங்களும் முழங்கப்பட்டன.

அதே சமயம், போரால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் புள்ளிவிவரங்களும் பேரணியில் வெளியிடப்பட்டன. இதுவரை காசா பகுதியில் சுமார் 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டன. இதில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேரணியில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், “இந்திய அரசு தனது வெளிநாட்டு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மனித உரிமை மீறல்களை அங்கீகரிக்காமல், காசா மக்களுக்கு ஆதரவாக உறுதியான குரல் கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...