உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

Date:

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம்  அறிவுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவு தனிநபர்கள், பங்குடமை, கூட்டாண்மைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பிற நிறுவனங்களுக்கு பொருந்தும்.

வரி செலுத்துவோர், செலுத்த வேண்டிய வரித் தொகையை இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் அல்லது இணையவழி வரி செலுத்தும் வசதி (OTPP) மூலமும் செலுத்தலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொடுப்பனவுக்கான இறுதித் திகதியான செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு பின்னர் செலுத்தப்படும் தொகைகள், வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு உத்தரவு மூலம் தீர்க்கப்பட்டாலும், தாமதமான செலுத்துதல்களாகக் கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரியைச் செலுத்தாமல் விடுதல் அல்லது தாமதமாகச் செலுத்துதல் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வட்டி மற்றும் தண்டப்பணம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ மாட்டாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான பணமோசடி...

மௌலவி என்பதற்காக மட்டும் ஒருவரை பின்தொடர்வது ஆபத்தானது; ஈஸ்டர் ஞாயிறு தீர்ப்பு தரும் பாடங்களில் ஒன்று.

2019 Easter Attack தொடர்பான வழக்கில் நேற்று குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முக்கியமான...

முன்னாள் பிரதமர் நஜ்புத்தீன் எர்பகான் நினைவாக சிறப்பு வெள்ளி நாணயம்: துருக்கி நிதி அமைச்சகம் வெளியீடு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும், நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவருமான...

3 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி,...