கத்தார் மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா தொழுகை இன்று (11) தோஹாவில் நடைபெற்றது.
இதில் அந்நாட்டு அமீரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த பலஸ்தீனர்களின் உடல்கள் பலஸ்தீனக் கொடியினாலும், கத்தார் பாதுகாப்பு அதிகாரியின் உடல் கத்தார் கொடியினாலும் கபனிடப்பட்டிருந்தது.
இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த நட்பு நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலையடுத்து, அந்நாட்டு பிரதமர் அப்துல்ரஹ்மான் அல் தானி, இஸ்ரேலின் அட்டூழியம் மற்றும் கொடுமைகள் தொடர்வதைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க அரபு – இஸ்லாமிய உச்சி மாநாடு நடைபெறும். அதில் இஸ்ரேல் மீதான பதிலடி தாக்குதல் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.