எல்ல பஸ் விபத்து: காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்காற்றிய வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை!

Date:

எல்ல பிரதேசத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்காற்றிய பதுளை போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ச தனக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் ஊடகங்களுக்கு மருந்துக் குறைப்பாடு குறித்துச் செய்தியளித்ததற்காகவே இந்த விசாரணை நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்ல விபத்தில் காயமடைந்தவர்ளுக்கு சிகிச்சையளிக்கும் போது தானும் காயமடைந்ததாகவும் அதனால் இன்று நன்றாக சட்டை கூட அணிய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், தனக்கு ஒழுக்காற்று விசாரணைக்காக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் பாலித குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, எல்ல விபத்தில் காயமடைந்த சிறுமி ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் மொத்தம் 17 பேர் காயமடைந்து அவர்களில் பலர் ஏற்கனவே வீடு திரும்பியுள்ளதாகவும் நால்வர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...