சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் வழக்கில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

Date:

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில்  சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது மரணித்த சிறுவன் ஹம்தி வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆறு மாதங்கள் கடந்தும், குற்றப்புலனாய்வு திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று (23) கொழும்பு நீதிமன்றத்தின் முன் நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ஹம்தியின் பெற்றோர், சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு எழுத்துமூல மனுவொன்றையும் கையளித்தனர்.

2022 டிசம்பரில்  இடது பக்க சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் எனக் கூறி, தவறுதலாக வலது பக்க சிறுநீரகத்தையும் அகற்றியதால், மூன்று வயது சிறுவன் ஹம்தி இரு சிறுநீரகங்களையும் இழந்தார்.

இதன் விளைவாக ஹம்தி சுமார் ஆறு மாதங்கள் அவஸ்தைப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சம்பவத்திற்குப் பின்னர் உடனடியாக குடும்பத்துடன் வெளிநாடு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆறு மாதங்கள் கடந்தும், குற்றப்புலனாய்வு திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Popular

More like this
Related

தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலினை சந்தித்தார் ரவூப் ஹக்கீம்

இந்தியாவின், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை, ஸ்ரீ லங்கா முஸ்லிம்...

தலாவ பகுதியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 06 பேர் உயிரிழப்பு!

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து...

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரை: இலங்கை- சவூதி அரேபியா ஒப்பந்தம் கைச்சாத்து.

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஒப்பந்தம் இலங்கை சவூதி அரேபியாவிற்கிடையில் கைசாத்திடப்பட்டது. நேற்று...

குர்ஆனின் மொழியில் அறிவியல் பேசிய குரல் மறைந்தது!

முஹம்மத் பகீஹுத்தீன் பேரறிஞர் டாக்டர் ஸக்லூல் ராகிப் முஹம்மத் அல் நஜ்ஜார் (1933...