சோளம் கிடைக்காததால் திரிபோஷா உற்பத்தி இடைநிறுத்தம்!

Date:

இலங்கையில் திரிபோஷா உற்பத்தி கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி முதல் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்தார்.

உற்பத்திக்குத் தேவையான சோளம் கிடைக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திரிபோஷா உற்பத்திக்காக 18,000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் முன்னர் வழங்கப்பட்டிருந்தாலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் ஒப்புதலுக்கான திருத்தங்களை முன்வைத்தார்.

அந்த திருத்தங்கள் அடங்கிய புதிய அமைச்சரவை பத்திரம் ஒக்டோபர் 07 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறும் வரை சோள இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஒக்டோபர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் சோளம் இறக்குமதி மீண்டும் தொடங்கியதும் திரிபோஷா உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றார்.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...