டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் நாட்டில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது .
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38,764 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளன.
டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை வாரத்திற்கு ஒருமுறை அடையாளங்கண்டு, டெங்கு நோயை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார் .
ஒருவருக்கு 02 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நிலைமை நீடிக்குமாயின், உடனடியாக வைத்தியரை நாடுமாறும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.