கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி முதல் மாலை 7.30 மணி வரை 9 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகள், பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மடிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய. பின்வரும் பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.