நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்!

Date:

இன்றையதினம் (16) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, அம்பாந்தோட்டை, மொணராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பக் குறிகாட்டி, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

சுற்றாடல் பிரச்சினைகளை முறையிடுவதற்கு புதிய WhatsApp இலக்கம்

சுற்றாடல் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...

இஸ்லாமிய வீரர்களுக்காக சில மாற்றங்களை செய்த FIFA: பீர் நிறுவனத்தின் லோகோக்கள் நீக்கம்.

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பம் கோரல்!

க.பொ.த சாதாரண தர 2025(2026) பரீட்சை மீள் திருத்தம் செய்வதற்கு  எதிர்வரும்...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!

கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும்...