இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
நியூயோர்க் பிரகடனம் என்ற பெயரில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை உட்பட 142 நாடுகள் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் இந்த தீர்வுக்கு இந்த பிரகடனம் ஓர் புதிய முயற்சியாக உள்ளது.
மேலும் இஸ்ரேல் மற்றும் அதன் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா உட்பட 10 நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளதுடன் அதேவேளை 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.