புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புப் பணிகள் இன்று திங்கட்கிழமை (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பின்னர், தற்போது, புதிய வசதிகளை மேம்படுத்துவதற்கான புனரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படுகிறது.
இப்பேருந்து நிலைய புதுப்பித்தலின் ஒரு பகுதியாக, புதிய கழிப்பறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பஸ் நிலையத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல விசேட அம்சங்களுடனான நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்படவுள்ளன.