கடந்த எட்டு மாதங்களில் 36,708 டெங்கு நோயாளர்கள் பதிவு

Date:

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் நாட்டில் முப்பத்தாறாயிரத்து எழுநூற்று எட்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 2749 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுளளனர்.

அத்துடன் இவ் வருடத்தில் இதுவரை 19 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு மற்றும் சிக்கன்குனியா இரண்டும் தற்போது அதிகம் பரவி வருவதால் யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால் அவர்கள் பெரசிடமோல் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒருவருக்கு காய்ச்சல் இருப்பின் அவர் டெங்கு வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்தால் பிற வலி நிவாரணிகளை உட்கொள்வது உட்புற இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.

எனவே பொதுமக்கள் இதுகுறித்து விழிப்புடன் இருக்கும்படியாகவும் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

52 ஆண்டுக்கால ஏக்கம்: துருக்கியில் முதன்முறையாக மணமகன் ஆடை மற்றும் மணமகள் ஆடை அணிந்து அசத்திய முதிய தம்பதி!

துருக்கியின் சாம்சூன் மாகாணத்தில் உள்ள அட்டகும் மாவட்டத்தில் பார்ப்பவர் நெஞ்சங்களை நெகிழ...

ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனம் : சட்டமூலம் வர்த்தமானியில்!

இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜூன்...

நாட்டில் டெங்குப் பரவல் அதிகரிப்பு!

வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் மீறி அதிகரித்து வருவதாக...

தமிழகத்தில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு: ‘ஈஸ்டர் தாக்குதல்’ நூல் பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் வழங்கி வைப்பு!

இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து தமிழக மக்களிடையேயும்,...