புதிய சமூக மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்தத் தருணத்தில் நபிகளாரின் போதனைகள் ஊழலற்ற நீதியான ஆட்சி பற்றிய உத்வேகத்தையும் தருகின்றன: பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

Date:

நபிகள் நாயகத்தின் போதனைகள் வெறும் மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல மாறாக, முழு மனிதகுலத்திற்கும் நன்மையளிக்கும் உலகளாவிய மனிதநேயக் கோட்பாடுகளாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய மீலாத் தினத்­தை­யொட்டி ஜனா­தி­பதி விடுத்­துள்ள செய்­தி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய அன்பர்கள், முகம்மது நபிகள் (ஸல்) நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நபிகள் நாயகம் அவர்களின் போதனைகள் வெறும் மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல; மாறாக, முழு மனிதகுலத்திற்கும் நன்மையளிக்கும் உலகளாவிய மனிதநேயக் கோட்பாடுகளாகும்.

குறிப்பாக, சமூக நீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான இரக்கம் மற்றும் ஆட்சியாளர்களின் பொறுப்புக்கூறல் பற்றிய அவர்களின் போதனைகள் இன்றைய சமூகத்திற்கு முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானவையாகும்.

அக்காலத்தில் சமூகத்தில் நிலவிய அநீதியும் ஊழலும் நிறைந்த அமைப்புகளுக்கு எதிராக எழுந்த ஒரு புரட்சிகரமான கொள்கையாகவே அவர்களின் செய்தி அமைந்திருந்தது.

மேலும், அது ஒரு மனிதன் மற்றொரு மனிதனைச் சுரண்டாத, அனைவரும் கண்ணியத்துடன் வாழக்கூடிய ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதற்கான உன்னதமான நோக்கத்தைக் கொண்டிருந்தது.

ஒரு நாடாக நாம் புதிய சமூக மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்தத் தருணத்தில், ஊழலும் ஏற்றத்தாழ்வும் அற்ற நீதியான ஆட்சி பற்றிய அந்தப் போதனைகள் நமக்கு மிகுந்த வலிமையையும் உத்வேகத்தையும் தருகின்றன.

இலங்கையின் முன்னேற்றத்திற்கு முஸ்லிம் சமூகம் ஆற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க பங்களிப்பை நான் மிகுந்த மதிப்புடன் நினைவுகூர்கிறேன்.

இந்த உன்னதமான போதனைகளை முன்மாதிரியாகக் கொண்டு, அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கப்பெறும், மனிதநேயமும் செழிப்பும் மிக்கதோர் தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.

அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த மீலாதுன்-நபி தினமாக அமையட்டும் – என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எல்ல பஸ் விபத்து: காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்காற்றிய வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை!

எல்ல பிரதேசத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய...

23 நிமிடங்கள் கைதட்டலால் அதிர்ந்த அரங்கம்: விருது வென்ற ஆவணப்படம் ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’

இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வயது பலஸ்தீன சிறுமியான ஹிந்த் ரஜப்பின்...

சவூதி துறைமுக அதிகார சபைத் தலைவருடன், அமைச்சர் பிமல் சந்திப்பு:முக்கிய விடயங்கள் பற்றி பேச்சு!

2 ஆவது நிலையான கடல்சார் தொழில் மாநாட்டில், அமைச்சர் பிமல் ரத்னாயக்க,...

ஜெனீவாவிற்கு பயணமானார் வெளிவிவகார அமைச்சர்!

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று...