முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து  வெளியேறினார்.

கொழும்பு, விஜேராம வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள்,வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்லேறு தரப்பினர்   வருகை தந்திருந்தனர்.

இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறவுள்ளதாக வெளியான தகவலையடுத்து அனைவரும் அங்கு சென்றனர்.

 

சீனத்தூதுவர் உள்ளிட்ட பல இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்தனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் புதன்கிழமை (9) பாராளுமன்றத்தில் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தில்  சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு நேற்றையதினம் சான்றுரைப்படுத்தினார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து  வெளியேறினார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...