பாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், டெல்லிக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமை இன்று (01) சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தியத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடனான தனது தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சர்வதேச பொருளாதாரத்தை தற்போது பாதிக்கும் நிலைமைகள் மற்றும் இடையூறுகள், தெற்காசியாவில் அவற்றின் தாக்கங்கள் குறித்து இந்த சந்திப்பு கவனம் செலுத்தியது.
கலந்துரையாடலின் போது, இந்த உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் சீதாராமனால் ஆற்றப்படும் தலைமைப் பங்கிற்கு மொரகொட தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கும் சாதகமாக பங்களிக்கிறது.