நேபாளத்தில் ஏற்ப்பட்டுள்ள அரசியல் எதிர்ப்புக்கு மத்தியில் அங்குள்ள இலங்கையர்களை வீடுகளிலேயே இருக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை தூதரக காரியாலத்தின் அதிகாரிகளை 10977- 9851048653 என்ற இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியாலமும் தொடர்புகொள்ள முடியும்.
நேபாளத்தில் அதிகரித்துள்ள அமைதியின்மைக்கு மத்தியில் அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.