ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20) நடைபெறுகிறது.
கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இவ்விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஒன்றாக நிற்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், அனைத்து சக்திகளையும் ஒன்றிணைப்போம்” என்ற கருப்பொருளின் கீழ் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.
இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் அழைக்கப்பட்டுள்ளன. மேலும், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உரையாற்றும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மறைந்த அரசியல் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான நிகழ்வும் இவ்விழாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.