“அண்ணலாரின் 1500 ஆவது மீலாத் தினத்தை அழகிய முறையில் அலங்கரிப்போம்” என்ற தொனிப்பொருளில் காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய சேகுநாயம் அல்-ஆலிமுல் பாழில் அஷ் ஷெய்ஹுல் காமில் அஷ் சேஹு அஹ்மத் இப்னு முஹம்மத் நாயகம் அன்னவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக
நேற்று (04) மள்வானையில் மாபெரும் மீலாத் நடைபவனி இடம் பெற்றது.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்த மீலாத் ஸலவாத் நடைபவனி நேற்று வியாழக்கிழமை காலை 10.45 மணிக்கு அல் முபாரக் தேசிய பாடசாலை மைதான வளாகத்திலிருந்து ஆரம்பித்து தல்கல முபாரக் மௌலானா தக்கியா ஷெய்ஹ் முஸ்தபா ஜும்மாப் பள்ளிவாசல் வரை நடைபவனியாக இடம் பெற்றது.
இரண்டு பாரிய வித்தியாசங்கள் வரவேற்கத்தக்க வாங்கும்.
1. செய்கு முஸ்தபா ஜும்மா பள்ளிவாசல் என கூற முற்படுகிறாரகள். தடி எடுத்தவர்கள் எல்லோரும் வேட்டைக்காரன் ஆனாலும் பள்ளிவாசல் என்னும் போது அங்கே கலாச்சாரங்களுக்கு பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் இல்லை. முஸ்லிம்கள் தொழுகையின் போது தொப்பி அணிவது ஒரு கலாச்சாரமே அன்றி அது கடமை அல்ல பள்ளிவாசலாயின் தொப்பி அணிய வற்புறுத்த முடியாது
2. 1116 வது கந்தூரியில் தான் மவுலுது என்பது மார்க்கமோ அமல் அல்லது இபாத அல்ல வெறும் பொழுதுபோக்கு மாத்திரம் தான் என்பதை அவர்களும் உணர்ந்து பார்வையாளர்களுக்கு உணர்த்தி உள்ளார்கள்
ஆடல் பாடல் ஆடை அலங்காரங்களுடன் பாதையிலே மின் விளக்குகளை சோடித்து பவானி வரும் கண்கொள்ளாக் காட்சி இது ஒரு பொழுதுபோக்கு என்பதனை அவர்கள் உணர்ந்துள்ளார்கள் என்பதனை கூற முடிகின்றது அல்ஹம்துலில்லாஹ் சந்தோஷமான விடயம்
வழி கெட்டவர்களே கவிஞர்களை பின்பற்றுவார்கள் கவிஞர்கள் பொய்யர்கள் பொய்யர்கள் அனைவர் மீதும் சைத்தான்கள் இறங்குகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இதனை இபாதா என கருதினாலும் நேர்வழியில் உள்ள முஸ்லிம்கள் இதனை ஒரு பொழுதுபோக்காக செய்வதில் எந்த தவறும் இல்லை