சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கான ஆரம்ப நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இன்று பாணதுறை கரையோரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையினால் குறித்த வாரம் முழுவதும் இலங்கையின் பிரதான கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
14 மாவட்டங்களில் இந்த திட்டம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.