2 ஆவது நிலையான கடல்சார் தொழில் மாநாட்டில், அமைச்சர் பிமல் ரத்னாயக்க, சவூதி துறைமுக ஆணையத்தின் தலைவரை சந்தித்தார்.
இம்மாநாடு சவுதி அரேபியாவினால் 2025, செப்டம்பர் 3 – 4 ஆம் திகதிகளில் நடத்தப்பட்டது.
இலங்கை மற்றும் சவூதி அரேபியாவுக்கிடையிலான கடல்சார் மற்றும் துறைமுக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன. குறிப்பாக, இரு நாடுகளின் முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான மூலோபாய கூட்டிணைப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சர் ரத்நாயக்க அவர்கள், இலங்கையில் நிலவி வரும் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட சமீபத்திய சாதகமான முன்னேற்றங்களை எடுத்துக்காட்டினார்கள்.
தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கை இணைக்கும் கப்பல் போக்குவரத்து வழிகளில் கடல்சார் தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அவர், இலங்கையின் துறைமுக மற்றும் கடல்சார் துறைகளில் சவூதி முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு மற்றும் பங்குடமை வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தார்.
இரு தரப்பினரும் கடற்படைப் பணியாளர் பயிற்சி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிகளை ஆராய்ந்ததுடன், சர்வதேச கடல் அமைப்பு (IMO) உள்ளிட்ட பலதரப்பு மன்றங்களில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும் விடயத்தில் உடன்பட்டனர்.
அமைச்சருடன், சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், ஜித்தாவில் பணிபுரியும், பதில் கன்சுல் ஜெனரல் மபூசா லாஃபிர், மேலதிக செயலாளர் தர்ஷிகா அனோஜனி மற்றும் அமைச்சர் அவர்களின் அந்தரங்க செயலாளர், அசங்க சந்த்ரசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.


