கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது மரணித்த சிறுவன் ஹம்தி வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆறு மாதங்கள் கடந்தும், குற்றப்புலனாய்வு திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று (23) கொழும்பு நீதிமன்றத்தின் முன் நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ஹம்தியின் பெற்றோர், சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு எழுத்துமூல மனுவொன்றையும் கையளித்தனர்.
2022 டிசம்பரில் இடது பக்க சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் எனக் கூறி, தவறுதலாக வலது பக்க சிறுநீரகத்தையும் அகற்றியதால், மூன்று வயது சிறுவன் ஹம்தி இரு சிறுநீரகங்களையும் இழந்தார்.
இதன் விளைவாக ஹம்தி சுமார் ஆறு மாதங்கள் அவஸ்தைப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சம்பவத்திற்குப் பின்னர் உடனடியாக குடும்பத்துடன் வெளிநாடு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆறு மாதங்கள் கடந்தும், குற்றப்புலனாய்வு திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.