“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

Date:

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt Asia 2025” என்ற பிரதான மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் மாநாடு நேற்று நடைபெற்றது. 20 நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்கவுள்ளதுடன் மாநாடு நாளை வரை நடைபெறவுள்ளது.

சர்வதேச கவனத்தை ஈர்ப்பதன் மூலம் தெற்காசியாவில் வளர்ந்து வரும் புத்தாக்க மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். புதிய தொழில்முனைவு மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு இது சிறந்த பக்கபலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதான மாநாட்டின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, புதிய தொழில்முனைவோர் கண்காட்சியையும் பார்வையிட்டார்.

Paytm ஸ்தாபகர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜய் சேகர் சர்மா மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான ஹான்ஸ் விஜேசூரிய உள்ளிட்ட உலகளாவிய நிபுணர்களுடனான கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.

இது குறித்து  டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்  எரங்க வீரரத்ன கருத்துத் தெரிவிக்கையில் ” நாட்டிற்கான மேம்பாட்டு கருவியாக புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்.

அத்துடன் தெற்காசியாவில் வளர்ந்து வரும் புத்தாக்க மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்  எனத்  தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...