தேசிய மீலாதுன் நபி தின நிகழ்வு நாளை செப்டம்பர் 5 அன்று ஹம்பாந்தோட்டை மாவட்டம், அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள போலான கிராமத்தின் மஸ்ஜிதுல் அரூஸிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் பி.ப. 02.30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது.
நிகழ்வுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், மற்றும் ஏனைய அதிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் உலமாக்கள் மற்றும் மதத் தலைவர்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.