நேபாள இடைக்கால தலைவராக சுசிலா கார்கி

Date:

நேபாளத்தின் இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டார்.

GenZ இளைஞர்களின் போராட்டதை அடுத்து பிரதமராக இருந்த சர்மா ஓலி இராஜினாமா செய்தார். சர்மா ஒலியை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சத்திர பவுடலும் இராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் இடைக்கால தலைவராக சுசிலா கார்கி போராட்டக்காரர்களால் தெரிவு செய்யப்பட்டார் தேர்வு செய்யப்பட்டார்.

அதேவேளை, நேபாளத்தின் இராணுவம் தலைநகர் காத்மண்டுவின் தெருக்களில் ரோந்துப் பணியாளர்களை நிறுத்தியுள்ளது.

ஊழல் மற்றும் அரசியலில் உறவினர்களுக்கு முன்னுரிமை என்பவற்றுக்கு எதிரான கடுமையான போராட்டங்கள் செவ்வாயன்று தீ வைப்பு மற்றும் வன்முறையாக மாறியது. அரசியல்வாதிகளின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.

அரசாங்க கட்டடங்கள் எரிக்கப்பட்டன. பாராளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதால் பிரதமர் இராஜினாமா செய்தார். திங்கட்கிழமை முதல் 29 பேர் இறந்துள்ளனர்.

 

புதன்கிழமை, காத்மண்டுவின் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது, பெரும்பாலான குடியிருப்பாளர்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்ததால் தலைநகரம் ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தது, ஆனால் எரியும் கட்டடங்களிலிருந்து புகை இன்னும் எழுந்து கொண்டிருந்தது.

 

இராணுவம், GenZ போராட்டக்காரர்களை அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைத்துள்ளது.

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு தற்போது இன்று காலை வரை அமுலில் உள்ளது, மேலும் வன்முறை மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்ட எவருக்கும் தண்டனை வழங்கப்படும் என்று இராணுவம் எச்சரித்துள்ளது.

வன்முறை மற்றும் கொள்ளைகள் தொடர்பாக இருபத்தேழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 31 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

புதன்கிழமை முதல் மேலும் போராட்டங்கள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும், தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துமாறு இராணுவத்தையும் காவல்துறையையும் போராட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டனர்.

 

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...