உள்ளூர் பொறியியலாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது நானோ செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளதாக மொரட்டுவையிலுள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.
BIRDS-X டிராகன்ஃபிளை’ என பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதியன்று நாசாவால் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ்-33 ரோக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
முன்னர், 2019 ஆம் ஆண்டில், இலங்கை தனது முதல் நானோ செயற்கைக்கோளான ‘ராவணன்-1’ ஐ வெற்றிகரமாக ஏவியது.
மேலும் 2022 ஆம் ஆண்டில், ஐந்து சர்வதேச கூட்டாளர்களை உள்ளடக்கிய பன்னாட்டு தொழில்நுட்ப ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக KITSUNE செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
அதன்படி, BIRDS-X டிராகன்ஃபிளை நானோ செயற்கைக்கோள் நாளை பிற்பகல் 2:15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அதன் நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.