ஐ.தே.கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா ஒத்திவைப்பு

Date:

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழாவை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நேற்று (02) கொழும்பில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல தெரிவித்தார்.

ஒத்திவைக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழாவை இந்த மாதம் வேறு ஒரு நாளில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மேலும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...