2029க்குள் 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை உருவாக்க அரசாங்கம் இலக்கு: அமைச்சர் பிமல்

Date:

2029 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவ அமைச்சு எதிர்பார்க்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2026 ஆம் ஆண்டுக்குள் கொழும்பில் 15 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பேருந்து, ரயில் மற்றும் டாக்ஸி ஆகியவற்றை ஒரே இடத்தில் பெறக்கூடிய வகையில் பல்வகை போக்குவரத்து மையங்கள் கட்டமைக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

கொழும்பு உட்பட மேலும் பல பேருந்து நிலையங்களை மேம்படுத்துவதே அமைச்சின் நோக்கம் என்று அமைச்சர் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

புறக்கோட்டையில் உள்ள கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே போக்குவரத்து அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் ‘க்ளின் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டத்தின் கீழ் ரூ. 425 மில்லியன் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது 08 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

இஸ்ரேல் ஆதரவு எம்பி-க்கு காபி வழங்க மறுப்பு: புரூக்ளின் Coffee Shop மீது அமெரிக்க நீதித்துறை அதிரடி விசாரணை!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த யூத நாடாளுமன்ற உறுப்பினரான டான் கோல்ட்மேனுக்கு...

இலங்கையில் 50,000ஐ நெருங்கும் டெங்கு நோயாளர்கள்!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு...

2027ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான சுற்றுநிருபம் வெளியீடு!

2027ஆம் கல்வியாண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு (Grade 1) மாணவர்களை அனுமதிப்பதற்கான...