அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் புதன் கிழமை மாலை, அதன் காரியாலய வளாகத்தில் பிரதேசத்தை நீண்ட காலமாக அச்சுறுத்தி வரும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விசேட கலந்துரையாலொன்று நடைபெற்றது.
புத்தளம் பிரதேச தலைமையக பொலிஸ் பரிசோதகர் H.N.D.kulatunga இவ் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் என்ற வகையில் செய்யமுடியுமான ஒத்துழைப்பு தொடர்பாகவும் பிரதேசத்தில் இதனை ஒழிப்பதற்கு பொதுமக்களோடு இணைந்து செய்யமுடியுமான பங்களிப்புக்கள் சம்பந்தமாகவும் கருத்துக்களை முன்வைத்தார்.
அத்துடன் புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் நுஸ்கி அவர்கள் மாநகர சபையின் பங்களிப்போடு இந்த பிரச்சினைக்கு முடியுமான ஒத்துழைப்புக்களையும் பங்களிப்பையும் செய்வதற்கு முன் வருவதாக அறிவித்தார்.
உலமா சபை நகரக்கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது அழைக்கப்பட்டிருந்த 8 பள்ளிவாசல்லுகளுடைய பிரதிநிதிகளும் வேறு பல முக்கியஸ்தர்களும் இப்பிரச்சினை தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்ததோடு கேள்விகளுக்கான தெளிவுகளையும் பெற்றுக்கொண்டனர்.
இக் கலந்துரையாடலின் போது பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
1. மாநகரசபை, பெரிய பள்ளிவாசல் , உலமா சபை என்பன இணைந்து காவல்துறை அதிகாரிகளை சந்தித்து சிவில் பாதுகாப்பு பகுதியை மேலும் பலப்படுத்துதல் சம்மந்தமான முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
2. முக்கூட்டு தலைமையும் இணைந்து வழக்கறிஞர்களை சந்தித்து இது தொடர்பான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல்.
3.அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பொலிஸ் ரோந்து நடுவடிக்கைகளை ஏற்பாடு செய்தல்.
4. தேவையான இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்தல்.
5. உலமாசபை புத்ததளம் நகரக்கிளை பெரிய பள்ளிவாசல் மற்றும் சர்வமத அமைப்பு என்பனை இணைந்து இப்பிரச்சினை தொடர்பான ஒரு முன்மொழிவை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தல்
அஷ்ஷைக் அப்துல் முஜீப் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடந்த
இந்நிகழ்ச்சியின் இறுதியில் விசேட அதியாக கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரி குலதுங்கவுக்கு உலமாசபையின் நகரக்கிளை தலைவரால் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.