புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி!

Date:

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புப் பணிகள் இன்று திங்கட்கிழமை (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பின்னர், தற்போது, புதிய வசதிகளை மேம்படுத்துவதற்கான புனரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்த பேருந்து நிலைய அபிவிருத்தித் திட்டத்துக்கு 424 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலைய புதுப்பித்தலின் ஒரு பகுதியாக, புதிய கழிப்பறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பஸ் நிலையத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல விசேட அம்சங்களுடனான நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதல்: இலங்கையின் அறிக்கை அரசாங்கத்தின் இயலாமையைக் காட்டுகிறது- ஹக்கீம்  

கத்தார் மீதான தாக்குதல் குறித்த அறிக்கை உட்பட, இந்த அரசாங்கம் வெளியிட்டுள்ள...

அவசர அரபு-இஸ்லாமிய உச்சிமாநாட்டிற்காக கத்தாரில் கூடும் தலைவர்கள்!

கத்தாா் தலைநகா் தோஹாவில் அரபு - இஸ்லாமிய தலைவர்களின் அவசர ஆலோசனைக்...

நாட்டின் பல பகுதிகளில் மேகமூட்டமான வானம்

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான வான் வழித் தாக்குதல்: கத்தார் நடத்தும் அவசர அரபு-இஸ்லாமிய உச்சி மாநாடு!

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான வான் வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து  அரபுலக தலைவர்கள்...