ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் பதவியை இராஜினாமா செய்யலாம்: பிமல் விடுத்த இறுதி எச்சரிக்கை

Date:

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் பதவியை இராஜினாமா செய்யலாம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரயில் திணைக்கள அதிகாரிகள், ரயில்களை முறையாக பராமரிக்கத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுடன் களுத்துறை மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“உங்கள் ரயிலில் ஜன்னல்களை மூட முடியாது. ஆவர்கள் சரி செய்வதாக சொல்கின்றனர். ஜன்னல்களை மூடின பின்னர் சூடாக  எரியுது. ஒரு தொலைபேசி வேலை செய்யவில்லை.

காலியில் இருந்து கொழும்புக்குப் போக இரண்டரை மணி நேரம் ஆகும், கழிப்பறைகளில் தண்ணீர் இல்லை. ரயில்கள் அலுவலக ரயில்கள். முறையாக வேலைக்கு ஆட்களை செயற்படுத்த முடியாதா?

இவர்கள் மக்கள் மீது மரியாதை இல்லாதவர்கள். ஜா-எலயை சேர்ந்த  சின்னக் குழந்தை ஒன்று ரயிலில் போகும்போது ஜன்னலிலிருந்து விழுந்து இரண்டு விரல்களை இழந்ததாகவும்  போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக காலி மற்றும் கொழும்பு இடையே இயக்கப்படும் முக்கிய அலுவலக ரயில்களில் உடைந்த ஜன்னல்கள், செயல்படாத மின்விசிறிகள் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் போன்ற பிரச்சினைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.

ஒரு சிறுவன் தனது முதல் ரயில் பயணத்தின் போது ஒரு பழுதடைந்த ஜன்னலில் இருந்து விழுந்து இரண்டு விரல்களை இழந்த ஒரு துயர சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ரயில்கள் உழைக்கும் மக்களுக்கானவை. இவ்வளவு மோசமான சேவையை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்?

குறிப்பாக ஒரு மாதத்திற்குள் கழிப்பறைகள், ஜன்னல்கள், மின்விசிறிகள் போன்றவற்றில் தெளிவான பழுதுபார்ப்புகளைக் காண விரும்புகிறேன்.

அடிப்படை சேவையை வழங்க முடியாவிட்டால், வெளியேறுங்கள். இது இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://web.facebook.com/reel/1170035175044817

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...