தரம் 2 -11 வரையான மாணவர்கள் ஆட்சேர்ப்பு சுற்றறிக்கையில் மாற்றம்: அமைச்சரவை அங்கீகாரம்

Date:

பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை மாணவர்களை உள்வாங்குவதற்கு ஏற்புடைய வகையில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, அதற்குப் பதிலாக புதிய ஆலோசனைச் சுற்றறிக்கையை வெளியிடுவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதற்காக வகுப்பறையொன்றிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அங்கீகரிக்கப்பட்டுள்ள எல்லைக்குள் மாத்திரம் பேண வேண்டியது அவசியமாகும்.

அதனால், நாட்டிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்தி, பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த இடைநிலைத் தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்காக சரியான முறையை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, இடைநிலைத் தரங்களில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தற்போது கல்வி கற்கும் பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைக்கு உள்வாங்குவதற்கு உண்மையானக் தேவையாகவுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில் பாடசாலைக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக, வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனை செயற்குழுவால் நியமிக்கப்பட்டுள்ள உபசெயற்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளையும் கருத்தில் கொண்டு, பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை மாணவர்களை உள்வாங்குவதற்கு ஏற்புடைய வகையில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, அதற்குப் பதிலாக புதிய ஆலோசனைச் சுற்றறிக்கையை வெளியிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ‘வியத்புர’ சலுகைகள் இரத்து!

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

வெற்றிகரகமாக நிறைவடைந்த Profood 2025 கண்காட்சி

Sri Lanka Food Processors Association (இலங்கை உணவு பதப்படுத்துநர்கள் சங்கம்...

அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்களை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி!

தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை முறையாக...

காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் விசேட குழுக்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி!

காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய...