ராஜித சேனாரத்னவுக்கு பிணை:ரூ. 50,000 ரொக்கப் பிணை, தலா ரூ. 2 மில்லியன் பெறுமதியான 2 சரீரப் பிணை

Date:

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, சந்தேகநபரை ரூ. 50,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூ. 2 மில்லியன் பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (09) காலை சிறைச்சாலை அதிகாரிகளால், அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்களின் வலுக்கும் போராட்டம்: பாராளுமன்றம், பிரதமர் இல்லத்துக்கு தீ வைப்பு

நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில்,...

நேபாளத்தில் வலுக்கும் போராட்டம்: அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு!

நேபாள அரசுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு...

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின்...

பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (09) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...