தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டி

Date:

இலங்கையின் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டியை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் இந்த பாடசாலை நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நாட்காட்டி அட்டவணை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணை திகதிகளையும் குறிப்பிடுகின்றது.

அதற்கமைய புத்தாண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டம் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2026 ஜனவரி 1ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பெப்ரவரி 14ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்காக தமிழ், சிங்கள பாடசாலைகள் மார்ச் 3ஆம் திகதி ஆரம்பமாவதுடன் முஸ்லிம் பாடசாலைகள் மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.

தமிழ், சிங்கள பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 10 ஆம் திகதி நிறைவடைந்து பின்னர் விடுமுறை வழங்கப்படும்.

தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறும்.

குறித்த பாடசாலைகளின் மூன்றாம் தவணை ஜூலை மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இஸ்ரேலையும் பலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ஐ.நா. தீர்மானம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு!

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள்...

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் வெடித்ததிலிருந்து அவுஸ்திரேலியாவில் இஸ்லாமிய வெறுப்பு ‘ கடுமையாக உயர்ந்துள்ளது:

நாட்டில் இஸ்லாம் மீதான பாரபட்சம் பரவலாக இருப்பதாகவும், சமூக ஒற்றுமையை அரித்து...

சில பகுதிகளில் மனித உடல் உணரும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...

இரு நாட்டு தீர்வு மற்றும் சுதந்திர பலஸ்தீனம் என்ற நியூயோர்க் பிரகடனத்தை வெளியிட ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம்

இரு நாடுகள் தீர்வை செயல்படுத்துதல் மற்றும் பலஸ்தீனத்தின் சுதந்திர அரசை நிறுவுதல்...