சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த சில காலமாகவே லஞ்சம் மற்றும் ஊழல் அரசியல் தலைவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அப்படித் தான் சீனாவைச் சேர்ந்த விவசாயத் துறை அமைச்சர் டாங் ரெஞ்சியன் என்பவர் மீது கடந்தாண்டு இலஞ்சம் வாங்கிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரே ஆண்டில் அவர் மீதான விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டாங் ரென்ஜியன் கடந்த 2007 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சீன அரசில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
அப்போது சில குறிப்பிட்ட திட்டங்களைச் செய்து கொடுக்க அவர் ரொக்கம் மற்றும் சொத்துக்களாக இலஞ்சம் பெற்றதாகப் புகார்கள் உள்ளன. இப்படி அவர் 268 மில்லியன் யுவான் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அவரை கைது செய்து சீன பொலிஸார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் டாங் ரெஞ்சியன் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதையடுத்து அவருக்கு சாங்சுன் மக்கள் நீதிமன்றம் மரணத் தண்டை விதிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதால், மரண தண்டனையை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது.