வியத்புர திட்டத்தில் வீடு வாங்கிய எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு

Date:

வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த எம்.பி.க்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 2024 டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி குறித்த திட்டத்தின் கீழ், 29 முன்னாள் எம்.பி.க்கள் அதற்கான விலையில் 25% பணத்தை செலுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.

‘வியத்புர’ வீட்டுத் திட்டத்திலிருந்து வீடுகளை கொள்வனவு செய்ய எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அண்மையில் தீர்மானித்திருந்தது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் (Urban Development Authority – UDA) செயற்படுத்தப்படும் வியத்புர வீட்டுத் திட்டம் (Viyathpura)  ஒரு சமூக நலத் திட்டமாகச் செயற்படுத்தப்படுகிறது.

இதன் மூலம், வீட்டு உரிமையை மேம்படுத்துவதும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும் இதன் முக்கிய இலக்குகளாகும்.

ஆயினும் குறித்த வீட்டுத் திட்டத்தில் எம்.பிக்களுக்கும் வீடுகளைக் கொள்வனவு செய்ய கடந்த அரசாங்க காலத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் இறுதி வரைவு அடுத்த வாரம் சமர்ப்பிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி...

அஸ்வெசும கொடுப்பனவு: நாளை மறுதினம் வைப்பிலிடப்படும்!

செப்டம்பர் மாதத்திற்கான நலத்திட்ட உதவிகள் நாளை மறுதினம்  பயனாளிகளின் வங்கிக் கணக்கில்...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 151...

நேபாளத்துக்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில்...