நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உச்ச நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.