23 நிமிடங்கள் கைதட்டலால் அதிர்ந்த அரங்கம்: விருது வென்ற ஆவணப்படம் ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’

Date:

இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வயது பலஸ்தீன சிறுமியான ஹிந்த் ரஜப்பின் கதையைச் சொல்லும் ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ 82வது வெனிஸ் திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருதை வென்றது.

பிரெஞ்சு-துனிசிய இயக்குனர் கௌதர் பென் ஹனியாவால் இயக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஹிந்த் ரஜப் உடைய வாழ்வின் இறுதித் தருணங்களை ஆவணப்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி 29, 2024 அன்று காசாவில் இருந்து தப்பிச் செல்லும்போது, ஹிந்தும் அவளது குடும்பத்தினரும் பயணித்த கார் இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் காரில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். காரில் ஹிந்த் மட்டுமே உயிருடன் இருந்தாள். கடைசி தருணத்தில், மீட்பு அமைப்பான ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு ஹிந்த் போன் செய்து உதவி கேட்டாள்.

ஆனால் இறுதியில் ஹிந்த் மற்றும் அவளை மீட்க வந்த 2 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரும் மீண்டும் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.

‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ ஆவணப்படத்தில் ஹிந்த் மீட்பு அமைப்பினரிடம் போனில் தனது மழலைக் குரலில் உதவி கோரிய ஆடியோ இடம்பெற்றுள்ளது.

விருது வென்றது குறித்து பேசிய படத்தின் இயக்குனர் பென் ஹனியா, “இந்தப் படத்தால் ஹிந்தை மீண்டும் கொண்டு வரவோ அல்லது அவள் அனுபவித்த அநீதியை அழிக்கவோ முடியாது. ஆனால் அவளது கதை படத்தின் எல்லைகளைக் கடந்து சென்றுள்ளது. இது ஹிந்தை பற்றியது மட்டுமல்ல, ஒரு முழு தேசத்தின் கதையைப் பற்றியது” என்று தெரிவித்தார்.

வெனிஸ் விழாவில் படத்தை பார்த்தவர்கள் சுமார் 23 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி, பாலஸ்தீனத்தை மீட்போம் என கோஷங்களை எழுப்பினர். வெனிஸ் விழாவில் அதிக நேரம் ஸ்டாண்டிங் ஓவேஷன் பெற்ற படமும் இதுவே ஆகும்.

Popular

More like this
Related

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...

10 மாதங்களில் 18 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம்...

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தும் தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டி!

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...