நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டங்களில் பங்கேற்க சிரியா ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா நியூயார்க் விஜயம் செய்துள்ளார்.
சுமார் ஆறு தசாப்தங்களுக்கு பின், ஒரு சிரிய ஜனாதிபதி பொதுச் சபையில் கலந்துகொள்வது முதற்தடவையாகும் ஆகும்.
1967ஆம் ஆண்டு தான் கடைசியாக சிரிய ஜனாதிபதி ஒருவர் ஐ.நா பொதுச் சபையில் கலந்துகொண்டிருந்தார்.
அதற்கு பின், அசாத் குடும்பத்தின் ஐம்பது ஆண்டுகால ஆட்சி கடந்த டிசம்பரில் முடிவுக்கு வந்தது. அப்போது அப்போதைய ஜனாதிபதி பஷார் அசாத், அல்-ஷரா தலைமையிலான திடீர் கிளர்ச்சியால் பதவியிழந்தார். இதன் மூலம் சிரியாவின் 14 ஆண்டுகள் நீண்ட உள்நாட்டுப் போரும் நிறைவடைந்தது.
அதன்பிறகு, அல்-ஷரா அரபு நாடுகளுடனும், மேற்கத்திய நாடுகளுடனும் உறவுகளை மீண்டும் உருவாக்க முயற்சித்து வருகிறார்.
