இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு.

Date:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழான பத்தாவது பாராளுமன்றத்தில் முதற்தடவையாக இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் அமைப்பதற்கான முயற்சி பின்போடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவினால் இந்த நட்புறவுச் சங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இதற்கான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்,

இதன் ஆரம்பக் கூட்டம் இன்று செப்டம்பர் 12ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு பாராளுமன்றத்தின் CR 04 இல் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

இச்சங்கத்தில் சேர விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பாராளுமன்றத்தின் வெளிநாட்டு உறவுகள் மற்றும் நெறிமுறை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் அமைக்கும் முயற்சி பிற்போடப்பட்டுள்ளது. புதிய திகதி அறிவிக்கப்படவில்லை.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...