நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, கலாசரங்களை சீரழிக்கும் இத்திட்டத்தை கைவிடுமாறும் அரசாங்கத்தை கோரியுள்ளார்.
LGBTQ சுற்றுலாத்துறை நாட்டின் கலாசார நம்பிக்கைகளை சீரழிக்கும். இதனால், வெளிநாட்டவரின் ஆசைகளுக்கு எமது குழந்தைகள் மற்றும் இளைஞர்களே பலியாகின்றனர்.
இதனால் ஏற்படும் விபரீதங்களை ஜனாதிபதி புரிந்துகொள்வார் என, நாங்கள் நம்புகிறோம். ஓரினச் சேர்க்கை மனப்பான்மையுடன் பிறந்தவர்களை நாம் துன்புறுத்தக்கூடாது.
அவர்களை கருணையுடன் நடத்த வேண்டும். இருப்பினும், அத்தகைய மனப்பான்மையுடன் பிறக்காதவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது,” என்றும் அவர் மேலும் கூறினார்.