சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை ”சிறுவர் தின தேசிய வாரம்” பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவ்வாண்டு “அன்புடன் காப்போம் – உலகை வெல்வோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் சிறுவர் தொடர்பாக இயங்குகின்ற அனைத்து நிறுவனங்களும் இணைந்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நெறிப்படுத்தலில், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்ச்சித்திட்டக் கோவையை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தின தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக 2025 செப்டெம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 2025 ஒக்டோபர் 01ஆம் திகதி வரை பிரதான தேசிய வைபவம் உள்ளிட்ட செயற்பாட்டுத்திட்டம் “சிறுவர் தின தேசிய வாரம் – 2025” எனப் பிரகடனப்படுத்துவதற்கும், அதன்கீழ் கீழ்க்காணும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.