ஜனாதிபதி இன்று அமெரிக்கா விஜயம்

Date:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளவுள்ளதோடு  மேலும் நாளை மறுதினம்  இலங்கை  நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றுவார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார்.

இதேவேளை அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான...

மறுவாழ்வு நிலையங்களாக சிறைச்சாலைகள் மாற்றப்படும்:அமைச்சர் ஹர்ஷன

மறுவாழ்வு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு நிலையங்களாக சிறைச்சாலைகளை மாற்றுவதற்கு அரசாங்கம் விரிவான...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப்...