பஹன மீடியா நிறுவனத்தின் தலைவரும் மீட்ஸ் செயல்திட்டத்தின் ஸ்தாபகருமான சமூக செயற்பாட்டாளர் அஸ்ஸெய்யித் சாலிம் ரிபாய் மௌலானா அவர்களின் தாயார் ஹாஜியானி செய்யிதா ஸஅதுனா மௌலானா இன்று காலை இறையடியெய்தினார்.
அன்னாரின் ஜனாஸா நாளை (26)கல்கிஸ்ஸையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு தெஹிவளை ஜும்மா பள்ளி மையவாடியில் காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
newsnow செய்திப் பிரிவை இயக்குகின்ற பஹன மீடியா நிறுவனத்தின் தலைவரின் தாயாரின் மறைவுக்கு பஹன மீடியா, newsnow அங்கத்தவர்கள் தமது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளனர்.