விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்துகின்ற துருக்கி குடியரசுடன் பரஸ்பர ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இலங்கையின் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதன் அனுகூலங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை மற்றும் துருக்கிக் குடியரசுக்கும் இடையில் விவசாய ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக 2021.02.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆயினும், குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுவரை கையொப்பமிடவில்லை. அதனால், குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமகால அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமரப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.