தொழில் திணைக்களத்தின் விசேட நடமாடும் சேவை வாரம் ஆரம்பம்!

Date:

ஊழியர்களின் தீர்க்கப்படாத ஊழியர் சேமலாப நிதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்கான நடமாடும் சேவை செயற்றிடம் வாரம் ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் உழியர்களுக்கு கீழ்க்காணும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான அனைத்து மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களிலும் விசேட நடமாடும் சேவை வாரம் செப்டெம்பர் 22 தொடக்கம் செப்டெம்பர் 26 வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழில் திணைக்களத்தின் தகவலின்படி,

உறுப்பினர்களின் ஊழியர் சேமலாப நிதி உறுப்புரிமைக் கணக்கிகளின் தரவுகள், நிலுவைகளைப் பரிசீலிக்கலாம்.

தவறான உறுப்பினர் கணக்கின் தரவுகள், தேசிய அடையாள அட்டையில் உள்ளபடியாக சரி செய்து கொள்ளலாம்.

உறுப்பினர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம்.

தொழில்சட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இச் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக ஊழியர்கள் தேசிய அடையாள அட்டை, பி பத்திரம் (பதிவு செய்யப்பட்டிருப்பின்), தொழில் தருநரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட கடிதம் (திருத்தங்கள் செய்துகொள்ள வேண்டியிருப்பின்) உள்ளிட்ட ஆவணங்களுடன் அண்மையில் தொழில் திணைக்களத்தின் அலுவலகத்துக்கு வருகை தருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஆன்மீகம் மற்றும் லௌகீக முன்னேற்றங்களுக்கு வழிகாட்டும் ஆஷூரா தின சிந்தனைகள்

அகீல் பின் ஸாலிம் அல்-ஷம்மரி (அரபு மூலம்) நன்றி- அல்-முஸ்லிம் இணையதளம் (குறிப்பு: இன்றைய...

சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி!

ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் மற்றும் அவர்...

இலங்கையில் பௌத்த மதத்தைப் பாதுகாக்க அவசர சீர்திருத்தங்கள் தேவை: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வலியுறுத்தல்!

இலங்கையில் பௌத்த மகா சங்கத்தினர் (துறவிகள்) சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான முறைகேடு குற்றச்சாட்டுகள்,...

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு – 4300 பேர் காயம்

வெனிசுலா நாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235ஆக...