புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி வரைவு, அடுத்த வாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு நேற்று பிற்பகல் அமைச்சில் ஒன்றுகூடியபோது குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இதனை தெரிவித்தார்.
புதிய வரைவில் மீதமுள்ள சிக்கலான பகுதிகளில் அடையாளம் காணும் பணிகள் இந்த வாரத்தில் முடிக்கப்படும் எனவும், அதற்காக குழு தினமும் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, குழுவினால் செய்யப்படும் மாற்றங்களை இணைத்து சட்ட வரைஞர் திணைக்களம் சட்டமூலத்தை உருவாக்கும் என்று குழு தலைவர் தெரிவித்துள்ளார்