இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையே இன்று சந்திப்பு நடைபெற உள்ளது.
இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையேயான போர் 2 ஆண்டுகளை நெருங்குகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் நாளுக்கு நாள் காஸா நகரம் மோசமடைந்து வருகிறது. காஸாவுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன.