ஐ.நா.வில் நெதன்யாகு உரை:கூட்டாக வெளிநடப்பு செய்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள்!

Date:

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது உரையைத் தொடங்கிய உடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், காஸாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைகளை இனப்படுகொலை எனக் குறிப்பிட்டும், பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய வேண்டுமெனவும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தங்களது உரையில் வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும், அவையில் மீதமிருந்த சில பிரதிநிதிகளின் முன்னிலையில் உரையைத் தொடங்கிய நெதன்யாகு, சுமார் 45 நிமிடங்கள் ஹிஸ்புல்லா, ஹமாஸ் படைகளுக்கு எதிரான இஸ்ரேலின் வெற்றிகளைக் குறித்து பேசினார்.

பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையில் பங்கெடுக்க விரும்பவில்லை என்பதாலும், பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் அவர்கள் வெளிநடப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.

இத்துடன், இஸ்ரேல் பிரதமரின் உரையின்போது ஒன்றாக வெளியேற வேண்டும் என அவர்கள் அனைவரும் முன்கூட்டியே திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஐ.நா.வின் இந்தப் பொது அவைக் கூட்டத்தில் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...

டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்

செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்...

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது...