பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்துள்ள வழக்கை எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 15 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
பின்னர் வழக்கு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது.
சுமார் 73 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக கையகப்படுத்தியதன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டி யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் மீது சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.