யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா என்ற பள்ளிவாசல் தொழுகைக்காக துப்பரவு செய்யப்படுகின்றது.
போரினால் இரண்டு ஆண்டுகளாக முடங்கியிருந்த பள்ளிவாசலை காசா நடுப்பகுதியில் உள்ள அல்-நுசைராத் முகாமில் வசிப்பவர்கள், தற்போது சுத்தம் செய்ய தொடங்கியுள்ளனர்.
நீண்டகாலமாக பூட்டப்பட்டிருந்த பள்ளிவாசல், போரின் தாக்கத்தால் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், மக்கள் தன்னார்வத்துடன் இணைந்து சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.